'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். பல மலையாள படங்களில் அவர் நடித்திருந்தபோதும் இந்த படம் அவருக்கு பெரிய அடையாளமாக இருந்தது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டபோது அதிலும் நடித்தார். தற்போது அன்பறிவு படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். இந்த படத்தில் அவர் ஹிப்ஆப் ஆதிக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
இதுகுறித்து ஆஷா கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் எனது நடிப்புக்கு கிடைத்து வரும் அங்கீகாரத்தைப் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. த்ரிஷ்யம் எனது கேரியரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இயக்குனர் ஜீத்து ஜோசப் எனக்கு அற்புதமானதொரு பாத்திரத்தை வழங்கினார், அந்த கதாபாத்திரம் ஒரு வலுவான போலீஸாகவும், அதே நேரம் மனதளவில் உடைந்து போன தாயாக, குழப்பமான மனநிலையை பிரதிபலிக்கும் பாத்திரமாகவும் இருந்தது. அதில் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதன் தமிழ் ரீமேக் மூலம் கமல்ஹாசன் போன்ற சிறந்த நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நடிப்பை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் பாராட்டிய விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது, அன்பறிவு படத்தில் எனது கதாப்பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவது என்னை உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா எப்போதுமே திறமையான நடிகர்களுக்கு உரிய அங்கீகாரம் தரும் மையமாக உள்ளது. மற்ற மொழி திரைத்துறை நடிகர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு, அவர்களுக்கு ஒரு அழகான பாத்திரத்தை அளித்து, அவர்களை அபிமான நடிகர்களாக மாற்றி வருகிறது. இங்குள்ள அனைவரின் அன்பையும் பாராட்டையும் நான் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என்கிறார்