நாளை ஜனநாயகன் படம் ரிலீஸ் இல்லை! | ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது |

தெலுங்குத் திரையலகத்தில் சீனியர் ஹீரோவான கிருஷ்ணம் ராஜு நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். 'பாகுபலி' நடிகர் பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவுக்கு தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்தனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கு ஹீரோக்கள் நேரில் சென்று மறைந்த கிருஷ்ணம் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணம் ராஜுவுக்கு சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். சக சீனியர் நடிகர், சக நடிகரின் நெருங்கிய உறவினர் என்று இருந்தும் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் காலை 9.20 மணியளவில் 'சைமா 2022' விருதுகளை வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தால் அல்லு அர்ஜுன். அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் அவரை 'டிரோல்' செய்தனர்.
எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த பிறகு மதியம் 2 மணி அளவில்தான் கிருஷ்ணம் ராஜுவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டார் அல்லு அர்ஜுன். அவரது இந்த செயல் பிரபாஸ் ரசிகர்களிடமும், கிருஷ்ணம் ராஜு ரசிகர்களிடமும் பொதுவான திரையுலக ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.