ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மதுரையில் நடந்த நடிகர் விக்ரமின் ‛கோப்ரா' பட புரமோஷன் நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி உள்ள ‛கோப்ரா' படம் ஆக., 31ல் வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக மதுரையில் கல்லூரி ஒன்றுக்கு வந்தார் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்ட படக்குழுவினர். மாலை 4.30 மணிக்கு நடிகர் விக்ரம் வருவதாக கூறிய நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர்.
இதனால் மாலை முதலே மாணவர்களிடையே கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து மாலை 6.45மணியளவில் விழாவிற்காக கல்லூரி வளாகத்திற்கு நடிகர் விக்ரம் மற்றும் நடிகைகள் வருகை தந்தனர். அப்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை சக மாணவர்களே கடும் சிரம்ப்பட்டு தூக்கி சென்று ஆட்டோ மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் குவிந்த நிகழ்ச்சியில் போதிய முன்னேற்பாடு இல்லாத நிலையில் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய விக்ரம் : மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மீசை தானாகவே மேலே சென்றுவிட்டது. நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார். மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும். நான் கல்லூரி படித்து கொண்டிருந்தபோது மதுரைக்கு அடிக்கடி வருவேன். மதுரை என்றாலே நல்ல ருசியான உணவும், ஜாலியும் தான். ஹவுஸ்புல் பட சூட்டிங்கின் போது மதுரைக்கு வந்த நான் மதுரை பற்றிய பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன். சுவையான வகை வகையான உணவுகளை சாப்பிட்டேன். இன்று நான் டயட்டில் இருந்தாலும் கூட மதுரை ஸ்பெசல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன் அவ்வளவு ருசியாக இருந்தது. அந்நியன் படம் போன்று சண்டை, காதல், கிரைம் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ள படம் கோப்ரா. மதுரைக்காரர்களுக்கு சினிமா என்றாலே வெறி தான் போல் என்பதை நிருபிக்கும் வகையில் அவ்வளவு வரவேற்பு தருகிறார்கள் என்றார்.
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விக்ரம் கூறுகையில், தனது பேவரிட் படம் கோப்ரா. நான் எப்போதும் ரசிகர்களின் செல்லம். சினிமாவிற்கு வருவது மிகுந்த கடினமானது இருந்தாலும் விடாமுயற்சி செய்தால் நிச்சயம் வரலாம் என்றார்.
தொடர்ந்து ரசிகர்களுடன் செல்ல புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டார் விக்ரம்.