போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் | ஆந்தாலஜி கதையில் உருவாகும் 'வவ்வல்ஸ்' | 40 படங்களில் போலீசாக நடித்த சமுத்திரக்கனி | விதார்த்தின் புதிய படம் 'தொடக்கம்' | பிளாஷ்பேக்: சிரஞ்சீவிக்கு கொடுத்த வாக்கை 9 வருடங்களுக்கு பிறகு காப்பாற்றிய பாரதிராஜா | ஏஆர் ரஹ்மானின் தெலுங்கு 'பெத்தி' பாடல் புதிய சாதனை | பிளாஷ்பேக்: கடன் பற்றி எச்சரித்த முதல் படம் |

சண்முகப்ரியன் இயக்கத்தில் விக்ரம்பிரபு, சுஷ்மிதா பட் நடிக்கும் படம் 'லவ் மேரேஜ்'. சென்னையில் நடந்த இந்த பட நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும், படத்துக்கும் என்ன சம்பந்தம் என விசாரித்தால் ஹீரோ விக்ரம் பிரபு சகோதரி ஐஸ்வர்யாவை தான் காதல் திருமணம் செய்துள்ளார் ஆதிக். அந்த வகையில் மச்சான் பட நிகழ்ச்சிக்கு வந்தார் என தெரிவிக்கப்பட்டது.
படம் குறித்து பேசிய விக்ரம்பிரபு, ''30 வயதை தாண்டிய திருமணம் ஆகாத இளைஞர்கள் வாழ்க்கையை ஜாலியாக படம் பேசுகிறது. தனிப்பட்ட கருத்தாக இனி காதல் திருமணம் சிறந்தது என சொல்வேன். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோபி செட்டிபாளையத்தில் எடுக்கப்பட்டது. அதை கேள்விப்பட்ட அப்பா சந்தோசம் அடைந்தார்.. தன்னுடைய பல படப்பிடிப்பு அங்கே நடந்தது என நினைவு கூர்ந்தார். பலரின் பெயரை சொல்லி அவர்களை பார்த்து விட்டு வா என்றார். நானும் அதை செய்தேன்'' என்றார்.




