ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

பாலா இயக்கும் வணங்கான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கி விட்டார். இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கோவாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதோடு அடுத்த வாரத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அந்த வகையில் சூர்யாவும் , சிறுத்தை சிவாவும் இருக்கிற வேகத்தை பார்க்கும்போது பாலா இயக்கும் வணங்கான் படத்தை முந்திக்கொண்டு இப்படம் திரைக்கு வந்துவிடும் போல் தெரிகிறது. இதற்கெல்லாம் மேலாக, சூர்யா 42 வது படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பத்து மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.




