பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' | ‛மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனருடன் இணையும் விக்ரம் | மீண்டும் விளையாட்டு படத்தில் சிவகார்த்திகேயன், தமிழரசன் பச்சமுத்து | ‛சிந்து பைரவி, முகவரி' மாதிரி ‛சைக்கிள் கேப்' | கருப்பு டிரைலர் எப்ப? அப்டேட் கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி |

மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து 2019ம் ஆண்டு வெளிவந்து 100 கோடிக்கும் மேல் வசூலித்து பெரிய வெற்றி பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்க மோகன் ராஜா இயக்கத்தில் 'காட் பாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்து வந்தார்கள்.
இன்று(ஆக., 22) சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு இப்படத்தின் டீசரை யு டியுபில் வெளியிட்டார்கள். டீசர் முழுவதும் ஒரு ஆக்ஷன் படமாக, சிரஞ்சீவியின் படமாக இருக்கும் என உணர்த்துகிறது. மலையாளத்தில் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரம் சஸ்பென்சாக இருந்து கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் வரும். அக்கதாபாத்திரத்தில் தெலுங்கில் சல்மான் கான் நடித்துள்ளார். அந்த சஸ்பென்சை நேற்று வெளியான டீசரிலேயே உடைத்துவிட்டார்கள்.
டீசரின் துவக்கத்தில் நயன்தாரா, பின்னர் சிரஞ்சீவி, கடைசியாக சல்மான்கான் என 'லூசிபர்' படத்தைத்தான் இப்படி மாற்றியிருக்கிறார்களா என ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது டீசர். மலையாளத்தில் பக்கா அரசியல் படமாக இருந்ததை தெலுங்கில் பக்கா மசாலா படமாக மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது. இருப்பினும் 24 மணி நேரத்திற்குள்ளாக தெலுங்கு டீசர் 74 லட்சம் பார்வைகளையும், ஹிந்தி டீசர் 22 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது.