'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் ரஜினிகாந்த் இந்திய திரைத்துறையில் மூன்று தலைமுறைகளை கடந்து தற்போதும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 1975ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிவாஜி ராவ் என்பவரை இயக்குனர் கே.பாலச்சந்தர் தான், ரஜினிகாந்த் என அறிமுகப்படுத்தினார்.
ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் கதாநாயகனாக மாறி, இந்திய சினிமாவையே கலக்கும் அளவிற்கு உயர்ந்து சூப்பர் ஸ்டாராக மாறினார். அவர் திரைத்துறையில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவை அடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இதை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரஜினியின் மகள் சவுந்தர்யா, ‛நீங்கள் தெய்வக் குழந்தை அன்பு அப்பா! வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு உணர்வு நீ' என்றும், ‛அப்பாவின் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்' எனவும் பதிவிட்டுள்ளா