தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு |
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட நிர்வாண போட்டோக்கள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதையடுத்து அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. என்றாலும் பாலிவுட் சினிமாவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் ரன்வீர் சிங்குக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். குறிப்பாக நடிகைகளும் இவரின் போட்டோ ஷூட்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில் பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில், ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ சூட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், நிர்வாண போஸ் கொடுத்து நம் நாட்டு பெண்களுக்கு ரன்வீர் சிங் நல்லது செய்து இருக்கிறார். அவர் தொடர்ந்து நிர்வாண போட்டோ சூட் நடத்த வேண்டும். அவரை அப்படி பார்க்கதான் நான் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் ராக்கி சாவந்த். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.