2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் படம் ஜெயிலர். இது ரஜினியின் 169வது படம். ரஜினி ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். கன்னட ஹீரோ சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. படத்துக்காக அங்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஹாலிவுட் சிகை அலங்கார நிபுணர் (ஹேர் ஸ்டைலிஷ்ட்) ஆலிம் ஹக்கீம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்துள்ளது. ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலிம், 'நமது ஒரே கிங், ரஜினிகாந்த்துடன் பணிபுரியும் புதுமையான நாள்' என்று குறிப்பிட்டுள்ளார்.