காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

தமிழ், ஹிந்தி, பிரெஞ்ச், ஆங்கிலம் என சர்வதேச நடிகராகிவிட்டவர் தனுஷ். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை நாளை ஜுலை 27ம் தேதியும், டீசர் ஜுலை 28ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'திருச்சிற்றம்பலம்' படத்தின் மூன்றாவது சிங்கிளும் நாளை ஜுலை 27ம் தேதி வெளியாக உள்ளது. ஒரே நாளில் தனுஷின் இரண்டு படங்களின் அப்டேட் வெளியாகிறது.
'திருச்சிற்றம்பலம்' படம் ஆகஸ்ட் 18ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
'வாத்தி' படத்தில் சம்யுக்தா மேனன், சாய் குமார், தணிகல பரணி நடித்துள்ளார்கள். இப்படத்தின் அப்டேட் உடன் படம் வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பு வருமா என தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.