இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் வட்டம் . மதுபானக்கடை படத்தை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கி உள்ளார். வருகிற 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் கமலகண்ணன் கூறியதாவது: இந்த படத்தில் நிறைய வித்தியாசமான தருணங்கள் இருக்கிறது. எனது முதல் படம் நிறைய வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தில் இருந்து இந்த படம் முழுதாக வேறுபட்டு இருக்கும். நாம் அதிகமாக திரில்லர் படங்களை விரும்ப ஆரம்பித்துவிட்டோம். ஆனால் இந்த சமூகத்தில் அதை விட பல திரில்லிங் தருணங்கள் இருக்கிறது. அது இந்த திரைப்படத்திலும் இருக்கிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான பார்வையை கருத்தை இந்த படம் சொல்ல முயற்சித்து இருக்கிறது. சமூகத்தில் ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையே ஒரு குற்ற உணர்வு இருக்கும், அதை இந்த படம் பேசும்.
ஆண்ட்ரியா கூறியதாவது: சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். என்கிறார் ஆண்ட்ரியா.