லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையான நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக விமரிசையாக அந்தத் திருமணம் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்வுகளை புகைப்படம் எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே அனுமதிக்காமல் வெளியில் நிற்க வைத்தாலும் கூட, சில செய்தி சேனல்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாலையில் நின்று கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
ஓடிடி தளத்திற்கு தங்களது திருமணம் பற்றிய நிகழ்வை நிகழ்ச்சியாக்கி பெரிய தொகைக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் விற்றுவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதற்கேற்றபடி திருமணம் நடந்து முடிந்ததும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டனர். வந்து வாழ்த்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சிலவற்றை ஒரு மாதத்திற்குப் பிறகு மட்டுமே வெளியிட்டார்கள்.
அவர்களது திருமணம் ஓடிடியில் வரும் என்று சொல்லப்பட்டது போல இதுவரை வரவில்லை. இதனிடையே, அந்த உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் அதற்காக தாங்கள் அளித்த 25 கோடியைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தங்கள் அனுமதி இல்லாமல் பிரபலங்கள் வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்ட காரணத்தால், அவர் ஒப்பந்தத்தை மீறியதாக நெட்பிளிக்ஸ் குற்றம் சாட்டியுள்ளதாம். மேலும், நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண செலவு மொத்தத்தையும் நெட்பிளிக்ஸ் பார்த்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. திருமண ஏற்பாடுகள், மணமேடை, மணம் நடந்த இடத்தின் அலங்காரம், பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்கள் செலவு, செக்யூரிட்டி, ஒருவருக்கான திருமண உணவு செலவு 3500 ரூபாய் என அனைத்திற்கும் நெட்பிளிக்ஸ் செலவு செய்ததாம். இதுவரை இப்படி ஒரு ஸ்பான்சர்ஷிப் திருமணத்தை தமிழ் சினிமா உலகம் கேள்விப்பட்டதில்லை.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் இது குறித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரிய வரும்.