'சலார்' டிரைலர் - மற்றுமொரு 'கேஜிஎப்' சாயல் படமா ? | அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து இடையூறு செய்தார் ஞானவேல் ராஜா : அமீர் வெளியிட்ட புதிய தகவல் | பெங்களூர் டேஸ் பைக் ரேஸ் காட்சி : அஞ்சலி மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல் | பிரித்விராஜின் ஆடு ஜீவிதம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | நயன்தாரா, தமன்னாவை ஓவர்டேக் செய்த வாமிகா கபி | மழை காரணமாக 'டல்' முன்பதிவுகள் | அஜித் - வெற்றிமாறன் கூட்டணி? | 18 மொழிகளில் வெளியாகும் ஜெயம் ரவி படம் | ரூ.60 கோடியில் உருவாகும் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் படம் | அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் இதோ |
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது பாலிவுட்டுக்கும் சென்று முன்னணி நட்சத்திரமாக புகழ் பெற்றவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரைப்போலவே அவரது மகள் ஜான்வி கபூரும் தற்போது சினிமாவில் நடிகையாக தனது பயணத்தை துவங்கி நடித்து வருகிறார். நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜான்வி கபூர், மலையாளத்தில் ஹிட்டான ஹெலன் என்கிற படத்திந இந்தி ரீமேக்கில் நடித்த பாராட்டுகளைப் பெற்றார். அதுமட்டுமல்லாது தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகி வரும் குட் லக் ஜெர்ரி என்கிற படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்திலும் தற்போது நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, தென்னிந்திய படங்கள் மீதான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார் ஜான்வி கபூர். குறிப்பாக மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை தான் ரொம்பவே ரசித்து பார்த்ததாகவும் நிஜமாகவே இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
அது மட்டுமல்ல தமிழில் வெற்றிமாறன் டைரக்ஷனில் நடிக்கவும் தான் விரும்புவதாக அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.