காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி | விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி |

இயக்குனர் என்.ராகவன் இயக்கத்தல் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'மை டியர் பூதம்'.  ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். காமெடி மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதம் மாதிரியான வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து வருகிறார். அஷ்வந்த், பரம் குகனேஷ், சாத்விக், சக்தி, கேசிதா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு ரீலிஸ் உரிமைகளை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளாராம். வருகின்ற  ஜூலை 15-ம் தேதி இப்படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
           
             
           
             
           
             
           
            