அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் . நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ,ராஷி கண்ணா , பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாய் கிழவி என்று பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகள் எழுதி பாடியுள்ளார். நாட்டாமை படத்தில் பொன்னம்பலம் தாய்கிழவி என்று கூறுவது மிகவும் பேமஸ். தற்போது இந்த அறிவிப்பு வீடியோவில் பொன்னம்பலமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் நாளை ஜூன் 24-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கு சதீஷ் நடனம் அமைத்துள்ளார்.