'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கிரண்ராஜ் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி ஆகியோருடன் நாய் சார்லி நடித்த கன்னடப் படமான '777 சார்லி' படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. நாய் சார்லியின் அற்புதமான நடிப்பால் படத்திற்கு பெரிய வரவேற்பும் கிடைத்தது.
இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் நாயகன் ரக்ஷித்திற்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை ரக்ஷித் பகிர்ந்துள்ளார்.
“இன்றைய நாள் என்ன ஒரு அற்புதமான ஆரம்பம். ரஜினிகாந்த் சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் நேற்று இரவு '777 சார்லி' படத்தைப் பார்த்து பிரமித்துள்ளார். படத்தின் உருவாக்கத் தரம், படத்தின் ஆழ்ந்த டிசைன் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ் ஆன்மிகத்தில் முடிவடைவது, ஆகியவற்றைக் குறித்து உயர்வாகப் பேசினார். சூப்பர் ஸ்டாரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது அற்புதமானது, நன்றி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.