ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி | சில்க் வேடம் : மறுத்த ஒருவர்... விரும்பும் இருவர் | வங்க எழுத்தாளரின் 'ஆனந்தம் மடம்' நாவலைத் தழுவி தயாராகும் '1770' | பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனை கலாய்த்த ராஜூ : ஆடிஷனில் நடந்த சுவாரசியம் | சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து நான்கு ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில் வெளியான படம் ‛விக்ரம்'. ரூ.350 கோடி வசூலை நெருங்கி வரும் இந்த படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து வருகிறது. இந்த வெற்றியால் கமல் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். திரைப்பிரபலங்கள் பலரும் கமலை வாழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்ட பதிவில், ‛‛வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே கமல்ஹாசன். மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக் கொள்ளலாம்'' என பதிவிட்டுள்ளார்.
பதிலுக்கு கமல்ஹாசன், ‛‛நம் அன்பை எப்போதாவது தான் நாம் பிரகடனப்படுத்திக் கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்'' என பதிவிட்டுள்ளார்.