'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2022ல் முடிய உள்ள இந்த ஆறு மாதத்தில் ஆறாவது மாதமான இந்த ஜுன் மாதத்திலும் குறைவான படங்கள் வெளிவந்துள்ளன. ஜுன் 3ம் தேதி கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் முக்கிய படமாக வெளிவந்தது. ஜுன் 10ம் தேதி எந்தப் படமும் வெளியாகவில்லை. ஜுன் 17ம் தேதி ஆர்ஜே பாலாஜி நடித்த 'வீட்ல விசேஷம்' படம் உள்ளிட்ட சில படங்கள் வெளிவந்தன.
இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜுன் 24ம் தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்', சுந்தர் சி, ஜெய் நடித்துள்ள 'பட்டாம்பூச்சி', சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்', அசோக் செல்வன் நடித்துள்ள 'வேழம்',ஆகிய படங்கள் வெளிவருகின்றன. இந்தப் படங்களுக்கிடையேதான் போட்டி இருக்கும். மேலும், சில சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.
கலையரசன் நடித்துள்ள 'டைட்டானிக்', அரவிந்த்சாமி நடித்துள்ள 'கள்ளபார்ட்' ஆகிய படங்கள் ஜுன் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இரண்டு படங்களும் வெளியாகவில்லை.