ஆக., 31க்கு தள்ளிப்போன ‛கோப்ரா' | பாஜக-வில் விரைவில் இணைய உள்ள நடிகை ஜெயசுதா | புஷ்பா 2 : பாடல் இசைக்கோர்ப்பு வேலைகள் ஆரம்பம் | நயன்தாரா திருமண நிகழ்வு, டாகுமெண்டரியாக வருகிறது… | அதிதி ஷங்கரை கவர்ந்த தமிழ் ஹீரோ | நியூயார்க்கில் நடைபெறும் சுதந்திர தின பேரணியில் அல்லு அர்ஜுன் | சந்திரமுகி 2 : முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | ராஜு முருகன் படத்திற்காக கெட்டப்பை மாற்றும் கார்த்தி | கமல் - உதயநிதி இணையும் படத்தை இயக்கும் பிரசாந்த் முருகேசன் | கிளாமர் இமேஜ் மாறவேண்டும்: யாஷிகா விருப்பம் |
சமீபத்தில் சாய்பல்லவி, ராணா நடிப்பில் தெலுங்கில் விராட பருவம் என்கிற படம் வெளியானது. வேணு உடுகுலா என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார். நக்சலைட் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி மத உணர்வுகள் குறித்து பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி தற்போதுதான் ஒருவழியாக அடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை திரையிட அனுமதித்தது தவறு என்றும் இந்த படத்தை மேலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி சென்சார் அதிகாரிகள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சிபாலிகுமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்த படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. மேலும் இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்சல் பக்கம் ஈர்க்கும் விதமாக உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட படத்திற்கு சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் அளித்தது தவறு. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் இந்த படத்தை உடனே தியேட்டரில் வெளியிடுவதற்கு தடை விதிக்கும்படியும் அந்த புகாரில் அவர் கூறியுள்ளார்.