கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு தெலுங்கில் Vaarasudu - வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.