'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோர் நடித்திருந்தனர் . ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்த இந்த படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளார் .
இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.