விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

விஜய் ஆண்டனி சமீபத்தில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் நடித்து வந்தார் . இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சரத்குமார், டாலி தனஞ்செயா, சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போது ஒருபக்கம் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு டாமன், டையூ பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. விரைவில் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.