பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த 'பஞ்சதந்திரம்' படத்தை மறக்கவே முடியாது. ஒரு சுவாரசியமான நகைச்சுவைப் படமாக 2002ம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட டிவியில் போட்டால் பலரும் தவறாமல் ரசிப்பார்கள்.
கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது ஆகியோர் 'யூத்கள்' போல அந்தப் படத்தில் அடிக்க கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம். அந்த 'பஞ்சதந்திரம்' குழுவினர் 'விக்ரம்' படத்திற்கான பிரமோஷன் வீடியோவில் இடம் பெற்றுள்ளார்கள்.
இன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோவில் 'பஞ்சதந்திரம்' படத்தில் அவர்கள் பேசிய 'கான்பிரன்ஸ் கால்' போலவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். அந்த 2 நிமிட வீடியோவில் ஒரு சுவாரசியமான குட்டிக் கதையையே சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு படத்தின் பிரமோஷனுக்காக இப்படி ஒரு வீடியோ வெளியாவது இதுவே முதல் முறை. இந்த ஐடியாவைக் கொடுத்தவருக்கும், அதை உருவாக்கியவருக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக.