படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‛விக்ரம்' படம் ஜூன் 3ல் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன.
விக்ரம் படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளார் கமல். இதற்காக நாடு முழுக்க புரொமோஷன் செய்து வருகிறார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமலிடம் செய்தியாளர்கள் வட - தென்னிந்திய பேதம் பற்றி கேட்டனர். அதற்கு ‛‛நான் ஒரு இந்தியன். நீங்கள் யார் என்றவர். என்னிடம் வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லை. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்தளவு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவு காஷ்மீரும் எனக்கு சொந்தம்'' என கூறி நாம் அனைவரும் இந்தியரே என ஒற்றுமைக்கான பாலமாக கமல் பதில் அளித்தார்.