2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசை வெளியீட்டு விழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளன. ஆனால், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 10 கதாநாயகிகள் இதுவரை கலந்து கொண்டதில்லை. அப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய விழா நாளை மே 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னையில் பிரபலமான ஸ்டோர் ஒன்றின் முதலாளியான சரவணன் கதாநாயகனாக நடிக்க, பல விளம்பரப் படங்களையும், அஜித், விக்ரம் நடித்த 'உல்லாசம்', ஷெரின், காயத்ரி ரகுராம் நடித்த 'விசில்' படங்களை இயக்கிய ஜேடி--ஜெர்ரி இயக்கும் படம் 'த லெஜன்ட்'. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரடேலா, ராய் லட்சுமி, ஷரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்கெனவே நடைபெற்றிருக்க வேண்டியதாம். ஆனால், 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டும் என கமல்ஹாசன் தரப்பில் கேட்டுக் கொண்டதால் 'த லெஜன்ட்' படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான சரவணன் விட்டுக் கொடுத்தார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.