மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ உள்பட பலர் நடித்து வரும் படம் விடுதலை. இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதையின் நாயகனாக சூரி நடித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டுமே இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது கதாபாத்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கதையில் மாற்றம் செய்துள்ளார் வெற்றிமாறன்.
அதனால் அவரிடத்தில் கூடுதலாக கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பு நடத்தி வருகிறார். இப்படி விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்தை அதிகப்படுத்தியதால் படத்தின் நீளம் திட்டமிட்டதை விட அதிகரித்து விட்டதாம். அதன் காரணமாக தற்போது விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடுவதற்கு வெற்றி மாறன் திட்டமிட்டிருப்பதாக வும், முதல் பாகம் வெளியாகி அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாவது பாகத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




