என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சூர்யா நடிப்பில் இயக்கவிருந்த இரும்புக்கை மாயாவி படம் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் இரும்புக்கை மாயாவி படத்திற்காக ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டு வந்த போது அந்த படத்தை இயக்குவதற்கான தைரியம் எனக்கு இல்லாதது போன்று உணர்ந்தேன். அதன் காரணமாகவே அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம், இந்தப் படத்தை இப்போதைக்கு என்னால் இயக்க முடியுமா என சந்தேகம் இருக்கிறது. அதனால் இன்னும் சில படங்களை இயக்கி விட்டு அதன் பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதிக்கவே சூர்யா நடிக்க இருந்த இரும்புக்கை மாயாவி படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ். தற்போது கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் விரைவில் இரும்புக்கை மாயாவி படத்தில் அவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.