ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் சிவாஜியின் குடும்பத்தில் இருந்து சக்சஸ் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் துஷ்யந்த். ராம்குமாரின் மகனான இவர் அடுத்து மச்சி என்ற படத்தில் நடித்தார். பின்னர் தயாரிப்பில் ஈடுபட்டார். நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நாயகனாக களமிறங்கி உள்ளார். எம்.ஜே.ரமணன் இயக்கத்தில் ஷூட்டிங் ஸ்டார் என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் ஹிந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷானும் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் என்ற படத்தில் இவர் ஏற்கனவே வில்லனாக நடித்தார். இவர்களுடன் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, விவேக் பிரசன்னா, மாசூம் சங்கர், ஆஸ்தா ஷரன், காஜல் சவுகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. ‛‛பிளாக் காமெடி வகையில் இந்த படம் உருவாகிறது. அதேசமயம் படத்தின் இறுதிக்காட்சிகள் பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்திவிடும்'' என்கிறார் இயக்குனர்.