விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை ரீமேக் செய்த விசு | பிளாஷ்பேக்: அந்தக் கால 'மிடில் கிளாஸ்' | அப்பாவுக்கு என்னாச்சு? கவுதம் ராம் கார்த்திக் விளக்கம் | அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் |

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பங்குதாரரான அக்ஷய் சரின் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு செக் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:
ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் துஷ்யந்தின் மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசா புரடெக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தேன். துஷ்யந்துக்கு 30 லட்சம் கடன் கொடுத்தேன். அதற்காக துஷ்யந்த், தலா 15 லட்சம் ரூபாய்க்கான 2 காசோலைகளை கடந்த 2019ம் ஆண்டு கொடுத்தார். ஆனால், போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டது.
வங்கி கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே எங்களுக்கு காசோலை அளித்துள்ளனர். இதுதொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸ்க்கு பதிலளிக்காததுடன் எங்களது பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே, துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி, பணத்துக்கு உத்தரவாதம் அளித்த ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராம்குமார், துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, விசாரணையை பிப்ரவரி மாதம் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ராம்குமாரும், துஷ்யந்தும் ஹீரோக்களாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார்கள். துஷ்யந்த் தற்போது படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.




