பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பழம்பெரும் காமெடி நடிகர் சந்திரபாவுக்கு நேரடி வாரிசு யாருமில்லை. தூத்துக்குடியை சேர்ந்த சந்திரபாபு, குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் சாரத் என்ற இளைஞர். உறவு முறையில் சந்திரபாபுவின் பேரன். தாத்தா பெயரிலேயே சந்திரபாவு பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி தெற்கத்தி வீரன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி, அதில் தானே நாயகனாகவும் நடிக்கிறார்.
சாரத்தின் நண்பர்களாக ‛முருகா' அசோக், ‛நாடோடிகள்' பரணி, ‛மாரி' வினோத் ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனின் தந்தையாக வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். மேலும் மதுசூதனன், கபீர் துஹான் சிங், பவன், ஆர்.என்.ஆர்.மனோகர், நமோ நாராயணா, ராஜசிம்மன், ஆர்யன், ரேணுகா, உமா பத்மநாபன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சாரத் கூறியதாவது: தூத்துக்குடியில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பே தெற்கத்தி வீரன் கதை. எனது சொந்த ஊரும் தூத்துக்குடிதான். அங்கு நடந்த உண்மை சம்பவத்தையே நான் படமாக்கியுள்ளேன். 5 வில்லன்கள் நான்கு நண்பர்களுக்கிடையே எழும் பகையும் அதனால் நடக்கும் மோதல்கள் அதற்குள் பின்னப்பட்ட ஒரு காதல் என திரைக்கதை, விறுவிறுப்பாகவும் அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். படம் வருகிற 2ம் தேதி வெளிவருகிறது. இன்றும் தமிழ் சினிமாவால் கொண்டாடப்படும் சந்திரபாபுவின் பேரன் நான். அவரது ரத்தம் எனக்குள்ளும் இருப்பதால் நான் சினிமாவுக்கு வர காரணமாக இருக்கலாம் என்றார்.