ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
முன்னணி தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி வருகிறார். தற்போது புஷ்பா 2, ரங்க மார்த்தாண்டா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் அனுசுயாவின் ஆபாசமான படங்கள் வெளிவந்தது. இதுகுறித்து பலரும் அனுசுயாவை விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுசுயா தனது படங்களை மர்ம ஆசாமிகள் மார்பிங் செய்து வெளியிடுவதாக ஆந்திர மாநில சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போலீசார், ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தை சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவரை கைது செய்துள்ளனர். துபாயில் பிளம்பரமாக பல ஆண்டுகள் வேலை பார்த்தவர் தற்போது பொழுதுபோக்கிற்காக நடிகைகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.