ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்து வாழ்ந்து, மறைந்தவர் சிவாஜி கணேசன். இவரது மகன்களான ராம்குமார் (நடிகர், தயாரிப்பாளர்), பிரபு(நடிகர்), இவர்களின் வாரிசுகளான துஷ்யந்த் (நடிகர், தயாரிப்பாளர்), விக்ரம் பிரபு(நடிகர்) ஆகியோரும் சினிமாவில் பயணித்து வருகின்றனர்.
ராம் குமாரின் மகனான துஷ்யந்த், ‛ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிக்க, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3.74 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதில் மத்தியஸ்தராக நீதிபதி ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். அசல் மற்றும் வட்டி உடன் சேர்ந்து ரூ.9.39 கோடியை திருப்பி செலுத்த துஷ்யந்த்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்கவும் துஷ்யந்திற்கு காலஅவகாசம் வழங்கியிருந்தது. ஆனால் துஷ்யந்த் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி துஷ்யந்தின் அப்பாவும், நடிகர் சிவாஜியின் மகனுமான ராம்குமார், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திநகரில் உள்ள சிவாஜி வீடு பிரபுவிற்கு சொந்தமானது. அந்த வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லை. ஆகவே இந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.