'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த சமந்தா. அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்ததால் ஐதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார்.
கதாநாயகியாக தமிழில் சமந்தாவின் முதல் படம் 'பாணா காத்தாடி'. ஆனால், அப்படம் வெளிவருவதற்கு முன்பே தமிழில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளிவந்தது. தெலுங்கில் அதே படம் 'ஏ மாய சேசவே' என உருவானது. அதில் த்ரிஷா கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்தவர் சமந்தா.
படம் வெளிவந்து 15 ஆண்டுகள் கடந்த பின்பும் அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார் சமந்தா. சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஏ மாய சேசவே' படத்தில் கார்த்திக்கை கேட் பக்கம் நான் சந்திப்பதுதான் முதலில் படமான காட்சி. அப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அணுஅணுவாக என்னால் மீண்டும் யோசிக்க முடியும். கவுதம் மேனனுடன் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம். கதாபாத்திரம் என்ன செய்ய வேண்டும், அதை எப்படி நம்மிடமிருந்து வாங்க முடியும் என்பதை அறிந்தவர் கவுதம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் படமாயிற்றே, எப்படி மறக்க முடியும் ?. அது மட்டுமல்ல அப்படத்தில் சமந்தா காதலித்த நாக சைதன்யாவையே நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் பிரிந்தும் விட்டார். நிழலில் மறக்க முடியாத காதல் அனுபவம், நிஜத்தில் மறக்க நினைக்கும் காதல் அனுபவம். யாருக்கும் இப்படி அமையக் கூடாது.