டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் |
பொதுவா நடிகர், நடிகைகள் கதைக்கு ஏற்றபடி பிணமாக நடிப்பது வழக்கம். அது ஒரு சில காட்சிகளாக இருக்கும், ஆனால் படம் முழுக்க பிணமாக நடிப்பது மிகவும் அபூர்வம். 'மகளிர் மட்டும்' படத்தில் நாகேஷ், 'ஏலே' படத்தில் சமுத்திரகனி, சமீபத்தில் வெளியான 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் பிரபுதேவா பிணமாக நடித்திருந்தனர்.
ஆனால் ஒரு நடிகை அதிகமான காட்சிகளில் படம் முழுக்க பிணமாக நடித்திருப்பது வருகிற 7ம் தேதி வெளிவர இருக்கிற 'எமகாதகி' படத்தில் நடித்திருக்கும் ரூபா கொடுவாயூர். ஆந்திராவை சேர்ந்த இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படம் 'உமா மகேஸ்வரா உக்ர ரூபசயா' என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர். அதன் பிறகு 'மிஸ்டர் பிரகனன்ட்' படத்தில் நடித்தார். தற்போது 'எமகாதகி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "படத்தின் படப்பிடிப்பு 40 நாள் வரை நடந்தது. இதில் நான் 20 நாட்கள் பிணமாக நடித்தேன். படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோதே உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் வெறும் பிணம் அல்ல... அதற்கு பின்னால் ஒரு பெரிய போராட்டம் இருக்கிறது. இதில் நான் பிணமாக மட்டுமே நடிக்கவில்லை. எனது கேரக்டருக்கு காதல் இருக்கிறது. அது தொடர்பான மோதல் இருக்கிறது. வாழ்க்கையில் சில லட்சியம் இருக்கிறது. கொடுமைகளுக்கு எதிராக துணிந்து நிற்கும் சக்தி இருக்கிறது. இந்த படம் தமிழில் எனக்கு நல்ல இடத்தை தரும் என்று நம்புகிறேன்" என்றார்.