மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு |

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் துஷ்யந்த். 20 ஆண்டுகளுக்கு முன்பு 'சக்சஸ்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மச்சி' என்ற படத்தில் நடித்தார். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே நடிப்பில் இருந்து விலகி சிவாஜி புரொடக்ஷன் நிறுவனத்தையும், வேறு சில தொழில் நிறுவனங்களையும் நடத்தி வந்தார். ஈஷான் புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, மீன் குழம்பும் மண்பானையும், ஜெகஜாலகில்லாடி படங்களை தயாரித்தார் இந்த படங்களும் பேசப்படவில்லை.
இந்த நிலையில் துஷ்யந்த் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சத்யராஜ், அஜ்மல் நடிக்கும் 'தீர்க்கதரிசி' என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சார்பில் பி.சதீஷ் குமார் படத்தை தயாரித்துள்ளார். மோகன், சுந்தரபாண்டிய ஆகியோர் இயக்கி உள்ளனர். இந்த படத்தின் அறிமுகவிழா நடந்தபோது இதில் துஷ்யந்தனும், அவரது தந்தை ராம்குமாரும் ஒன்றாக கலந்து கொண்டு தயாரிப்பாளருக்கும், இயக்குனர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார்கள்.