ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

அஜித், எச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கும் 61வது படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார். அஜித்தின் 61 வது படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்கப்போகவும், இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இவருக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.
'பாகுபலி, கேஜிஎப் 2 , சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து வருவதாக கூறப்படுகிறது .




