175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்களின் வெளியீடுகள் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்குத்தான் கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் முன்னுரிமை கொடுத்தன. சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க யாருமே வரவில்லை என்பதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த வாரம் 6 படங்கள் வெளியாகியுள்ளன. நேற்று 'காத்து வாக்குல ரெண்டு காதல், ஹாஸ்டல்' ஆகிய படங்கள் வெளியாகின. இன்று 'கதிர், அமைச்சர், திவ்யா மீது காதல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ஓடிடியில் 'பயணிகள் கவனிக்கவும்' படம் வெளியாகி உள்ளது.
இனி வரும் வாரங்களில் வாரத்திற்கு இரண்டு, மூன்று படங்களாவது வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் மே 6ம் தேதி 'கூகுள் குட்டப்பா, விசித்திரன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.