சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதால் தற்போது பிரமோஷன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், டீசரும் வெளியாகி இருக்கிறது. இப்படியான நிலையில் வேட்டையன் படத்தின் கலை இயக்குனர் கதிர் இப்படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார் .
அதில் அவர் கூறும் போது, ‛‛வேட்டையன் படத்தின் இடைவேளை வித்தியாசமாக முடியும். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டுவதாக இருக்கும். அதேபோல் ரஜினியின் ஓப்பனிங் காட்சி மாஸாக இருக்கும். நீண்டநாளைக்கு பிறகு ரஜினி ரசிகர்களுக்கு இந்த காட்சி மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். சண்டை காட்சிகளிலும் அதிக உற்சாகத்துடன் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் இருக்கும். பெரும்பாலும் கிளைமாக்ஸ் வரும்போது ஒரு சண்டைக்காட்சி நடக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி இருக்காது. முற்றிலும் வித்தியாசமான மாறுபட்ட ஒரு கதை வடிவத்துடன் இடம் பெற்றிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.




