2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவிலும் மற்றும் ஊட்டியிலும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இது குறித்து பூஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா 44 படக்குழுவினர் தேங்க்யூ பூஜா என ஒரு மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2022ல் பூஜாவின் வருடம் என்று சொல்லும் அளவிற்கு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இதில் எந்த ஒரு படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த 'கிஸிகா பாய் கிஸிகி ஜான்' என்கிற ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளியானது. இந்த 2024ல் அவரது நடிப்பில் வெளியாகும் விதமாக படங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் இந்த சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன. இவை இரண்டும் 2025ல் வெளியாகும் என தெரிகிறது.