கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
நடிகர் கதிர் தமிழில் பரியேறும் பெருமாள், மதயானைக்கூட்டம், சுழல், கிருமி, ஜடா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்து வந்தவர் தற்போது மலையாளத்திலும் நடிகராக அறிமுகமாகிறார். அதன்படி, ‛ஆர்.டி.எக்ஸ்' பட இயக்குனர் நகாஷ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து, கதாநாயகனாக மலையாளத்தில் 'ஐ ம் கேம்' எனும் புதிய படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இதில் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்தது தொடர்ந்து தற்போது நடிகர் கதிரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த படத்தை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது .