இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. அங்கு இப்படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே மதுரை விமான நிலையத்தில் தனது ரசிகர்களை சந்தித்த விஜய், கொடைக்கானலுக்கு சென்றபோதும் ரசிகர்கள் படையெடுத்ததால் படப்பிடிப்பு நடைபெற்ற கட்டிடத்தின் மேலே நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்துள்ளார்.
இந்நிலையில் அங்கு 5 நாள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று கொடைக்கானலில் இருந்து கார் மூலம் மதுரை வந்த விஜய் பின்னர் தனி விமானம் மூலம் சென்னை திருப்பி உள்ளார் விஜய். முன்னதாக கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும்போது அவருக்காக காத்திருந்த ரசிகர்கள் அவருக்கு அம்மன் புகைப்படத்தை பரிசாக கொடுத்துள்ளார்கள். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.