பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் | தெலுங்கு சினிமாவில் தடம் பதிக்கும் கன்னட ஹீரோயின்கள் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா. அதேபோல், நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது 100வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக எழுந்து வந்த நிலையில், தற்போது தமிழ் இயக்குனர் ஒருவர் பட்டியலில் முந்தியுள்ளார். அசோக் செல்வன் நடித்த 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்தி இயக்கத்தில் நாகார்ஜூனாவின் 100வது படம் உருவாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, தனுஷ், சூர்யா, கார்த்தி என தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் சூழலில், தெலுங்கு நடிகர், தனது 100வது படத்திற்கு தமிழ் இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.