‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

இந்திய சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒரே நாளில் வெளியாகும் இரண்டு பான் இந்தியா படங்களில் தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர், ஜுனியர் நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதனால், அவர்கள் சார்ந்த தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் ஒரு போட்டியை ஏற்படுத்தியுள்ளார்கள்.
'கூலி' படத்தில் சீனியர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா வில்லனாக நடிக்க, 'வார் 2' படத்தில் ஜுனியர் என்டிஆர் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க, இரண்டு படங்களுமே ஆகஸ்ட் 14ம் தேதி பான் இந்தியா படங்களாக வெளியாகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு படத்தில் இத்தனை மல்டி ஸ்டார்கள் இதுவரையில் நடித்ததில்லை என்று சொல்லுமளவிற்கு 'கூலி' படத்தில் உள்ளார்கள். மொழிக்கு ஒரு பிரபலத்தை படத்தில் சேர்த்துள்ளார்கள். 'வார் 2' படத்தில் நாயகன் ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் ஆகியோருடன் கியாரா அத்வானியின் கிளாமரையும் நம்பியுள்ளார்கள்.
நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் இருவரில் யார் அவர்களது படங்களுக்குக் கூடுதல் பலத்தைத் தரப் போகிறார்கள் என்பதை தெலுங்குத் திரையுலகினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்கள்.