ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாளத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய்பாபு. பிரைடே பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்த இவர், இன்னொரு பக்கம் பிசியான நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட நடிகை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிக விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் விஜய்பாபு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தன்னை பலவந்தமாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே விஜய்பாபு தயாரிப்பில் ஒரு படத்தில், நான் நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் எனது நன்மதிப்பைப் பெறும் விதமாக நடந்து கொண்ட விஜய்பாபு கொஞ்சம் கொஞ்சமாக என்னை அவர் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை என்னை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.. மேலும் இதை வைத்து என்னை தொடர்ந்து தனது ஆசைக்கு அடிபணிய வைப்பதுடன் என்னுடைய திரையுலக முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக இருக்கிறார். இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இதேபோல பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனாலேயே அவரது உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று இவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன். இவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புதுசாக வெளியே வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட நீதி பற்றி பேச வேண்டுமென்று அதில் கூறியுள்ளார்