நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பல புதிய திரைப்படங்களை வெளியிட்டு வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இப்போது வலிமை படத்தை வெளியிட உள்ளது. வரும் மே 1 தொழிலாளர் தினத்தை 'வலிமை' தினமாகக் கொண்டாடவுள்ள ஜீ தமிழ், மாலை 6:30 மணிக்கு அஜித் குமார் நடிப்பில் உருவான குடும்பங்கள் கொண்டாடிய 'வலிமை' மெகாஹிட் திரைப்படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ஒளிபரப்பவுள்ளது. வினோத் இயக்கிய இந்த படத்தில் அஜித் அதிரடியான போலீசாக நடித்தார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும், முக்கிய வேடத்தில் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷியும் நடித்தனர்.
இந்த படம் தவிர்த்து சுகி சிவம் தலைமையில் நடத்தும் மே தின சிறப்பு பட்டிமன்றத்தில் 'இன்றைய தேவை கடின உழைப்பா அல்லது புத்திசாலித்தனமா' என்ற தலைப்பில் பாரம்பரிய விவாத நிகழ்ச்சியை காலை 9.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்புகிறது. அதைத் தொடர்ந்து சிறப்பு தமிழா தமிழா நிகழ்ச்சியும், சூப்பர் குயின் சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.
துப்புரவு தொழிலாளிகளுக்கு கவுரவம்
அன்றைய தினம் "தூய்மை பணியாளர்களை சரியாக நடத்துகிறதா சமூகம்? என்ற தலைப்பில் சிறப்பு தமிழா தமிழா விவாத நிகழ்ச்சி ஒளிபரப்புகிறார்கள். அண்மையில் இதற்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு பதக்கங்கள் அணிவித்தும், சன்மானங்கள் வழங்கி, பாராட்டியதோடு அவா்களுக்கு நல்ல விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.