ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
விஜய் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தொடர் சிப்பிக்குள் முத்து. இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹீரோயினாக பிரபல மாடல் அழகி லாவண்யா அறிமுகமாகிறார். இவர் மாடலாக இருந்த போது, சர்ச்சை நாயகியாக வலம் வரும் மீரா மிதுனால் ஏமாற்றப்பட்டார் என்ற தகவல் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பெண்களை மீரா மிதுன் பல மாடல் ஷோக்களில் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றியதாக பலரும் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் மிஸ் சவுத் இந்தியா நிகழ்ச்சிக்கு அழைத்து செல்வதாக மீரா மிதுன் சிலரை ஏமாற்றியிருந்தார். அதில் ஒரு மாடல் அழகி தான் லாவண்யா. அவர் தற்போது சீரியலில் கமிட்டாகியிருப்பதால் அவரை பற்றி தகவல்களை துளாவிய நெட்டீசன்கள் இந்த செய்தியை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
லாவண்யா அந்த ஒரு முறை ஏமாந்திருந்தாலும், தனது திறமையால் குயின் ஆஃப் மெட்ராஸ் 2019 மற்றும் மிஸ் தமிழ்நாடு 2020 ரன்னர், மிஸ் போட்டோஜெனிக் - மிஸ் சவுத் இந்தியா ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இதன்மூலம் ஜீ தமிழின் சூப்பர் குயின் நிகழ்ச்சியின் வாய்ப்பு கிடைக்கவே சின்னத்திரையில் நுழைந்த லாவண்யா தற்போது விஜய் டிவியில் நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார். இப்போதே அவருக்கு ரசிகர் பட்டாளம் சேர்ந்து வரும் நிலையில், மிக விரைவில் முன்னணி நடிகையாகவும் ஜொலிப்பார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.