குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பிரபல யூ-டியூப் விஜேவான பார்வதி, ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சி மூலம் பிரபலாமானார். இதனை தொடர்ந்து சில படவாய்ப்புகளும் வந்தன. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, மாடலிங்கிலும் கலக்கில் போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். ஆனால், வீஜே பார்வதியை பிடிக்காத சில கும்பல் எப்போதுமே அவரை பற்றி ஆபாசமாக பேசி வருகிறது. சமீபத்தில் பார்வதியை ஆபாச பட நடிகை மியா கலிபாவுடன் கம்பேர் செய்து போஸ்ட் செய்திருந்தனர். இதற்கெல்லாம் பார்வதியும் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு நபர் பார்வதியின் பக்கத்தில் அத்துமீறி கமெண்ட் செய்துள்ளார். அவர் அதில், 'ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல் போயிருவ' என கூறி ஆபாசமாகவும் அவரை வர்ணித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பார்வதி, 'மூடிட்டு கிளம்பு. எங்களுக்கு என்ன பண்ணனும் தெரியும். வந்துட்டான் அட்வைஸ் பண்ண. முதல்ல பெண்கள மதிக்க கத்துக்கோ' என கூறியுள்ளார். தற்போது அந்நபரின் ஆபாசமான கருத்துக்கு எதிராகவும், பார்வதிக்கு ஆதராகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.