Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மீ டூன்னா என்ன ? : மேடையில் நடிகையை நெளிய வைத்த திமிரு நடிகர்

24 மார், 2022 - 15:29 IST
எழுத்தின் அளவு:
I-don't-know-what-is-MeToo-says-Vinayakan

விஷால் நடித்த 'திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக முக்கிய வேடத்தில் நடித்தவர் விநாயகன்.. ஆனால் ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும், தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல், மலையாள சினிமாவில் மட்டும் அவ்வப்போது நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் வெளியான 'கம்மட்டிப்பாடம்' படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராகவும் மாறினார்.

இந்தநிலையில் நடிகை நவ்யா நாயர் பல வருட இடைவெளிக்கு பிறகு நடித்து ரிலீஸாகியுள்ள 'ஒருத்தீ' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் விநாயகன்.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வி.கே.பிரகாஷ், நவ்யா நாயர் ஆகியோருடன் விநாயகனும் கலந்து கொண்டார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மீ டூ விவாகரத்தில் சிக்கி, போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே வந்தார் விநாயகன். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவரது மீ டூ விவகாரம் குறித்து நிருபர் ஒருவர் விநாயகனிடம் கேள்வி எழுப்பினார்.

உடனே டென்சனான விநாயகன், “மீ டூன்னா என்ன..? எனக்கு விளக்கம் சொல்லுங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் வச்சுக்கிட்டவங்க இங்க யாராவது இருக்கீங்களா..? நான் பத்து பேரோட செக்ஸ் வச்சுக்கிட்டேன்.. ஆனா அவங்க அனுமதியோட தான் அதை செய்தேன்” என சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பித்தார்.

நடிகை நவ்யா நாயரோ என்னடா இது என்கிற மாதிரி அவஸ்தையில் நெளிந்தவர், ஒருகட்டத்தில் விநாயகனிடம் போதும் என்பது போல சைகை செய்து அவரிடமிருந்து மைக்கை வாங்க முயற்சித்தார். ஆனாலும் விநாயகன் ரொம்பவே சீரியஸாக மீண்டும் அதுபற்றியே பேசினார்.

படம் பற்றிய கேள்விகளை கேட்காமல் சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகருக்கு ஏற்பட்ட அவமான நிகழ்வு குறித்து இப்போது கேட்ட நிருபரை குறை சொல்வதா..? அல்லது எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என தெரியாத விநாயகனை குறை சொல்வதா..?

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலிக்கு பிரம்மாண்ட கட் - அவுட்ராஜமவுலிக்கு பிரம்மாண்ட கட் - அவுட் 24 வருடம் கழித்து மஞ்சு வாரியருக்கு கலா மாஸ்டர் கொடுத்த கிப்ட் 24 வருடம் கழித்து மஞ்சு வாரியருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Girija - Chennai,இந்தியா
25 மார், 2022 - 12:16 Report Abuse
Girija நடிகை ஒன்னும் நெளிந்த மாதிரி தெரியவில்லை, சினிமா நடிகை என்பதற்கு சரியான விளக்கம் தமிழ்வாணன் கூறியுள்ளார். இது தெரியாமல் அப்பாவி கிராமத்து பெண்களும் கல்லூரி பெண்களும் இதில் சிக்குகின்றனர். நடிகை என்ற குழந்தையை ஷூட்டிங் க்கு தயார் செய்ய, பிறந்தமேனி கோலத்தில் இருந்து தான் ஆரம்பமாகும். அப்புறம் என்ன மீ டு ?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25 மார், 2022 - 05:43 Report Abuse
Sanny பேட்டிகண்டவர் என்ன காரணமாக பேட்டி எடுக்கவந்தாரோ அதை கேட்கனும் தேவை இல்லாமல் அந்த நபரை நிருபர் சங்கடப்படுத்தக்கூடாது.
Rate this:
Girija - Chennai,இந்தியா
25 மார், 2022 - 12:17Report Abuse
Girijaஇது போன்ற காமவெறியன்களை பொது இடத்தில வைத்து கேள்விகேட்பதன் மூலம் தான் சமூகம் சரியாகும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in