இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மஞ்சுவாரியர் நடிப்பில் சமீபத்தில் லலிதம் சுந்தரம் என்கிற படம் வெளியானது. மஞ்சு வாரியரே சொந்தமாக தயாரித்துள்ள இந்த படத்தை இயக்கியதன் மூலம் அவரது தம்பி மது வாரியர் ஒரு இயக்குனராக மலையாள திரையுலகில் நுழைந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக பிஜுமேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் குடும்ப விழா நடனப்பாடலாக ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. அதில் பழைய படங்களிலிருந்து சில ஹிட் பாடல்களை எடுத்து ஒன்றாக இணைத்து மறுஉருவாக்கம் செய்துள்ளார்கள். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார் கலா மாஸ்டர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாடலில் கண்ணாடி கூடும் கூட்டி என 24 வருடங்களுக்கு முன்பு மஞ்சுவாரியர் நடித்து ஹிட்டான ஒரு பாடலையும் இணைத்துள்ளனர். அந்தப்பாடல் உருவாக்கம் குறித்த வீடியோவை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள மஞ்சுவாரியர் இதுகுறித்து கூறும்போது, “அதே பாடல்.. அதே ஹீரோயின்.. அதே டான்ஸ் மாஸ்டர்.. ஆனால் 24 வருடங்கள் என்பது மட்டும் தான் வித்தியாசம்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்