வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கராச்சி 81 என்கிற படம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மலையாள சினிமா இதுவரை பெரிய அளவில் தொடாத உளவாளி சப்ஜெக்ட்டை மையப்படுத்தி இதன் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
அதன்பிறகு நான்கு வருடங்கள் படத்தை பற்றிய தகவலே இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதுடன் இந்த படத்தில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகும் இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் இந்த படத்தின் டிஸ்கஷன் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக பிரித்விராஜ் டொவினோ தாமஸ், தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஆகியோருடன் இணைந்து லேட்டஸ்ட்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
இந்த வருடத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்களாம் பாகிஸ்தானிலேயே சென்று இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தவர்கள் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இந்திய எல்லை பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்..